ஹெல்மெட்டுடன் எஸ்கேப்-ஆன போலீசார்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டார போலீசார் மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை நிறுவனம் சார்பில் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. டிஐஜி லலிதா லெட்சுமி தொடங்கி வைத்தார்.  பேரணி திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் மில், பெல் கணேசபுரம் வழியாக மீண்டும் மஞ்ச திடல் பாலத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் காவல் துறை மற்றும் தனியார் இரு சக்கர விற்பனை மைய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்க வந்த 8 போலீசாரிடம் ஹெல்மெட் இல்லை. இதனால் அந்த 8 போலீசாருக்கும்  தனியார் நிறுவனம் ஹெல்மெட்டுகளை இரவலாக தந்து பேரணி முடிந்து தருமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் பேரணி முடிந்த பின் அந்த 8 போலீசாரும் ஹெல்மெட்டுகளை திரும்ப கொடுக்காமல் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து மைக்கில் அறிவிக்கப்பட்டும் யாரும் ஹெல்மெட்டுகளை திரும்ப தரவில்லை. ஒரு ஹெல்மெட் விலை ரூ. 600 என்றும் 8 ஹெல்மெட்டுகள் போய் விட்டதால் அதற்குரிய தொகை ரூ.4800 ஐ தனது சம்பளத்தில் நிறுவனம் பிடித்துக் கொள்ளும் என்று அந்நிறுவன ஊழியர் வேதனை தெரிவித்தார். போலீசாரே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது என்று அந்த ஊழியர் புலம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *