ஒரே பையில் 7 கோடி தங்கம் கடத்தல்…. மும்பை விமான பயணி சிக்கினார்

மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை நடத்தினர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இதையடுத்து அவரது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் ரகசிய அறை போல் அமைக்கப்பட்டு தங்க கட்டிகள் மறைத்து வைத்து தைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் டிராலி பேக்கின் தையலை பிரித்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம்.  இதையடுத்து போலீசார் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *