64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராவுடன் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Share on

போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மர்ட்போன் சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 


புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.


போக்கோ எக்ஸ்2 சிறப்பம்சங்கள்:


– 6.67- இன்ச் 1080×2400 பிக்சல்

FHD+ 20:9 எல்.சி.டி. ஸ்கிரீன்

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்

– அட்ரினோ 618 GPU

– 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11

– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– 64 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm, f/1.89

– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், 1.12μm, f/2.2

– 2 எம்.பி. டெப்த் சென்சார்

– 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm, f/2.4, 4K 30fps, 960 fps at 720p

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2- 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 1.75μm

– பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ

-வைபை, ப்ளூடூத் 5- யு.எஸ்.பி. டைப்-சி

– 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அட்லான்டிஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள் மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *