ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவையா? மாநில அரசு மறுப்பு !

Share on

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு நீக்கப்பட்டதையடுத்து அங்கு தகவல் தொடர்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

பின்னர் 2ஜி சேவை மற்றும் இணைய தள தொடர்பு உள்ளிட்ட வசதிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வந்தன.

அதேநேரம் ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலைத் தாங்கிய மின்னஞ்சல்கள் மற்றும் வாட்சப் செய்திகள் புதன் மதியத்தில் இருந்து வலம்வரத் துவங்கின.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலுக்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தகவல் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 4ஜி சேவை குறித்த தகவல் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *