போகியால் புகை மூட்டம்.. சென்னையில் 42 விமான சேவைகள் பாதிப்பு..!!

Share on

சென்னை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டத்துடன் போகி புகையும் சூழ்ந்ததால் 42 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டமும், போகி புகையும் சூழ்ந்து இருந்தது. இதனால் இன்று காலை மஸ்கட், அபுதாபி, சார்ஜா, கோலாலம்பூர், சிங்கப்பூர் விமானங்கள், ஐதராபாத், புனே, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம், அகமதாபாத் நகரங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் தாமதமாக வந்தன.

இதுபோல் சென்னையில் இருந்து இன்று காலை அபுதாபி, கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், லண்டன் செல்ல வேண்டிய வெளிநாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

மொத்தம் 42 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. மொரிசீயஸ் நாட்டில் இருந்து பெங்களூரு வழியாக சென்னை புறப்படும் ஏர் மொரிசீயஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *