3வது சுற்றில் பிளிஸ்கோவா: வோஸ்னியாக்கி முன்னேற்றம்

Share on

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் பெலாரசின் அலக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சை 1 மணி, 47 நிமிடம் போராடி வீழ்த்தினார். உள்ளூர் நட்சத்திரம் ஷுவாய் ஸாங் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹங்கேரியின் டிமியா பாபோஸை மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *