பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் மீன் பிடித்திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்நிலைகளில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஜாதி, மதம் பாராமல் கிராமத்தார்கள் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொன்னமராவதி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கண்மாய்களில் இதுவரை மீன்பிடி திருவிழா நடந்துள்ளது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கண்மாயின் கரையில் மடை முன்பு தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து வெள்ளை வீசிய பின்பு மீன்பிடி திருவிழா துவங்கியது. இதில் தூத்தூர் கிராமத்தில் உள்ள தூத்தூர் கண்மாயில் பிரமாண்டமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆலவயல், அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, அரசமலை, ஏனாதி, தொட்டியம்பட்டி, ஆரணிப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, காயம்புஞ்சை, பகவாண்டிப்பட்டி, வலையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையிலேயே ஒன்று கூடி கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, தூரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைபிடித்தனர்.

அதில் வலைகளில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய வகை மீன்கள் கிடைத்தன.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *