அன்னவாசல் அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி


அன்னவாசல் அருகே உள்ள கே.நாங்குப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதை தொடர்ந்து வாடிவாசலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிபாய்ந்த காளைகளில் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை 120 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
15 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் அஜீத்குமார் (20), குமார் (39), உள்ளிட்ட வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டு உரிமையாளர்கள் உள்பட15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாமுன்டி (29) உள்ளிட்ட 2பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, டேபிள்பேன், குக்கர், ஹாட்பாக்ஸ், சில்வர் குடம், அண்டா, மிக்சி, டைனிங்டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் அள்ளி சென்றனர்.
WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372