செவித்திறன் குறைபாடுடைய மாணவிக்கு காக்கிளியர் செவித்திறன் கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆல்திசில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் செல்வி.சபிராபானு, தா/பெ.பெனாசீர் பேகம் என்ற செவித்திறன் குறைபாடுடைய மாணவிக்கு பொருத்தப்பட்டு பழுதடைந்த இருந்த Cochlear Implant Device பதிலாக
ரூ.56,000/- மதிப்பில் புதிதாக உதிரிபாகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் 23.05.2022 அன்று வழங்கினார்கள்.
மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படும் மனநலம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான நான்கு
இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000/- மதிப்பிலான போர்வைகள் என மொத்தம் ரூ.1,31,000/- மதிப்பிலான உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலர் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.உலகநாதன் மற்றும் ஆல் திசில்ரன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பி. இரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *