அறந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு திரு உருவ படத்திற்கு சுற்று சுழல் துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பெரும்பிடுகு முத்தரையரின் 1347ஆம் ஆண்டு சதய விழா கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் அவரின் திருவுருவச் சிலைக்கு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவினார். இதேபோல் கட்சி நிர்வாகிகளும் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், உணவு பொட்டணங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வார்டு உறுப்பினர்கள் துளசி காசிநாதன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் சொர்ண ராசு, வட்டாட்சியர் காமராஜ் மற்றும் அறந்தாங்கி சுற்றுவட்டார முத்தரையர் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் வினோத் அஜய்குமார், அழியாநிலை ராஜேஷ், பசுமதி, மதி, அருண், சேதுபதி மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *