சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை டாக்டர் சி .விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

நார்த்தாமலை அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பாலு என்ற முத்துக்கருப்பன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சத்தியமங்கலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் மற்றும் பழ பந்தலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சமீப காலமாக கோடை வெயில் மக்களை வாட்டி எடுக்கும் நிலையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனைப்படி மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வகையில் சத்தியமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலு என்ற முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கோடை தண்ணீர் பந்தல் மற்றும் பழபந்தலை இ ன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் உதயம் ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் விதவிதமான பழங்கள், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் இ ன்னாள்விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி .விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு வழங்கினார்.


WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *