புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உழவர் நலத்துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திறன் பரவலாக்கம் வயல் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ரெகுநாத புரத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் உழவர் நலத்துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திறன் பரவலாக்கம் வயல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் உழவர் நலத்துறை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திறன் பரவலாக்கம் வயல் விழாவினை ரெகுநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தார். உழவர் திறன் பரவலாக்கம் வயல் விழா குறித்து விளம்பர பதாகைகள் ஏந்தி ரெகுநாதபுரம் கடைத்தெருவில் பேரணியாக வலம் வந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், புதுக்கோட்டை வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி, கறம்பக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் லூர்து ராயப்பன், கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர் முகமது ரபீக் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Jh0JVlggmPUJtZNvjbJu8H

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *