கறம்பக்குடியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட கறம்பக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கறம்பக்குடி தீயணைப்பு மீட்புப் பணி துறையினர் நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட கறம்பக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கரம்பக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு முகாம் ரோட்டரி சங்க தலைவர் சதக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் அபாயம் குறித்தும் அதை எவ்வாறு தடுப்பது மற்றும் தீபாவளி பண்டிகையின்போது மத்தாப்பூ சோளப்பொறி சரவெடி போன்றவகை வெடிக்கும் முன்பு சணல் சாக்கு தண்ணீர் மணல் ஆகியவை வைத்து கையாளும் முறைகள் குறித்து குழந்தை ராசு தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். செயல்விளக்கம் மூலம் நிகழ்ச்சிகள் செய்து காட்டி மாணவர்களும் அதை பின்பற்றி வெடி விபத்தின் போது கையாளும் முறைகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை செய்து காண்பித்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் சதக்கத்துல்லா, செயலாளர் காந்தி, பொருளாளர் சதீஷ்குமார், தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், பஞ்சவர்ணம், காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் ஞானசேகரன் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu

Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews

Youtube –https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/

Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/

Telegram – https://t.me/PudukkottaiNews

Twitter – https://twitter.com/PudukaiNews



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *