புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் ஊராட்சியில் உள்ள திருவாந்தவயல்கிராமத்தில் ஐந்து வருடமாக குடி தண்ணீர் வருவதில்லை என்று அக்கிராமத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆண்கள் பெண்கள் அனைவரும் கரூர் முக்கிய சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

அவர்கள் கூறியதாவது நாங்கள் ஐந்து வருடமாக குடிதண்ணீர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை நாங்கள் சுமார் 5 கிலோமீட்டர் நடந்து குடிநீர் பிடிக்க செல்ல வேண்டிய நிலைமை உள்ளது அதனால் இந்த நாகரிக காலத்திலும் இதுபோன்ற சம்பவம் எங்கும் இல்லை அதனால் நாங்கள் சாலை மறியல் செய்தோம் இன்னும் இரண்டு தினங்களில் எங்களுக்கு குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கூறினர்,

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *