புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகின்ற திருப்பெருந்துறையில் நோய் தொற்று அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகின்ற திருப்பெருந்துறை சிவ ஆலயங்களில் முக்கிய ஆலயமாக விளங்கும் இவ்வூரில் இந்தியாவில் உள்ள அனைத்து சிவாலய பக்தர்களும் இங்கு வருவது வழக்கம் அந்த ஊரின் ஊரின் பெயர்ப் பலகை இருக்கும் இடத்திலேயே அங்கு ஹோட்டலில்பயன்படுத்தும் எச்சி இலைகள் மற்றும் குப்பைகளை ,கோழி கழிவுகள்,அந்த பகுதியில் கொட்டுவதால் மாடு, பன்றி ,நாய்கள், அதை தின்கின்றது தற்போது மழைக்காலம் என்பதால் இந்த இடத்திலிருந்து கொசு அதிகமாக உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் ,அந்த சாலையில் அதிகம் போக்குவரத்து செல்வதால் இந்த கழிவுப்பொருள்களை தின்று கொண்டுள்ள மாடு நாய் பன்றி போன்றவை சாலையில் வாகனத்தில் ஒரு சில நேரம் அடிபட்டு விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்றவும் இந்தப் பகுதியில் டெங்கு வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *