தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை பெற்றார் ஆசிரியர் வடிவேல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த ஆசிரியர் வடிவேலுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.பொன்னமராவதியை சேர்ந்தவர் ஆசிரியர் வடிவேல் இவர் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குறைந்த அளவிலான மாணவ, மாணவிகளை கொண்டு நடைபெற்று வந்த இப்பள்ளி தலைமையாசிரியர் வடிவேல் வருகைக்கு பின்பு அதிக அளவில் மாணவ மாணவிகளை சேர்த்து அப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வி, நல்லொழுக்கம், மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து அப்பள்ளியின் கல்வித் தரத்தினை உயர்த்தி திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சிறப்புடைய செய்தார் அப்பள்ளி தலைமையாசிரியர் வடிவேல்.ஆசிரியர் வடிவேலுவின் கல்விச் சேவையை கெளரவிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதினை சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி தலைமையில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையாசிரியர் வடிவேலுவுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

இதில் அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய பலர் கலந்து கொண்டனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *