புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் கறம்பக்குடி மாணவிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்.

இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் கறம்பக்குடி மாணவி மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளா ர். அவருக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இட ம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு என் ஜினீயரிங் கல்லூரியிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க ப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12- ம் வகுப்பு வரை படித் த மாணவர்கள் சுமார் 11 ஆயிரம் பேருக்கு இந்த ஒதுக்கீட்டின் மூலம் இடம் கிடைக்கும். இன்ஜினியரிங் படிப்புக்கான கட் – ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு கடந்த 25-ஆம் தேதி கல ந்தாய்வு தொடங்கியுள்ளது.

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி முத்தமிழ்தேவி 191.94 கட்-ஆப் மதிப்பெண்க ள் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக் கான ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் மாநில அளவில் 2- ம் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை க்கழக கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கான அனு மதி ஆணையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை சென் னையில் வழங்குகிறார்.

இதுகுறித்து மாணவி முத்தமிழ்தேவி கூறியதாவது.

எனது சொந்த ஊர் கறம்பக்குடி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி கிராமமாகும். தந்தை முருகேசன் கூலித்தொழிலாளி. தாய் சீரங்கம் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளி. தம்பி முத்து க்குமார்,தங்கை அருந்ததி ஆகியோர் பள்ளியில் படித்து வரு கின்றனர்..

நான் 1 முதல் 8- ம் வகுப்பு வரை தட்டாமனைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது என்னைப்போ ன்ற கிராம பகுதியில் உள்ள ஏழை விளிம்பு நிலை மாணவர் களுக்கு பெரும் வரப்பிரசா தமாகும். நகரப் பகுதியில் தனி யார் பள்ளிகளில் உயர் தரத்துடன் மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எனக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அதிலும் முதலமைச்சரிடம் சேர்க்கை ஆணையை பெறப்போ வது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. நீட் தேர்வையும் எழுதி உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *