ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போல ரயில்வே தரைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது ரெயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி பெண் மருத்துவர் பலியானார்.


புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியா(வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை மாமியாருடன் ஒரு காரில் புறப்பட்டு துடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பகுதியில் இடி&மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த வழியாக கார் வந்தபோது மழைநீரில் சிக்கிக் கொண்டது.

மாமியார் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறினார். ஆனால், சீல்ட் பெல்ட் அணிந்து இருந்ததால் சத்தியாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சத்தியா உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் விளைவாக அந்த கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் போராட்டத்தை கைவிட்டனர் அப்பகுதி மக்கள் தரைப் பாலம் அமைக்கும் போது தடுத்து நிறுத்தினர் ஆனால் காவல் துறையினரை வைத்து கிராம மக்களை மிரட்டி இந்த பாலத்தை அமைத்ததாகவும் இந்தப் பாலம் முறையாக அமைக்கவில்லை தரமற்ற முறையில் உள்ளது என தெரிவித்தனர்.

உடனடியாக பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் தரமற்ற முறையில் பாலம் அமைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

you tube;https://youtu.be/KB9wGcPHAA4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *