பொன்னமராவதி அருகே கண்டியாந்த்தம் கிராமத்திற்கு மீண்டும் பேருந்து வசதி தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள
கண்டியாந்த்தம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் மற்றும் கிராம மக்களின் நீண்ட ஆண்டு போராட்டத்திற்கு பின் பொன்னமராவதியிலிருந்து கண்டியாந்த்தம் கிராமத்திற்கு பேருந்து வசதி தொடங்கியது.

நீண்ட ஆண்டு காலம் கண்டியாந்த்தம் கிராமத்திற்கு பேருந்து வசதியின்றி அக்கிராம மக்கள் சிற்றுந்தில் பணயம் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் தமிழக அரசின் மகளிருக்கு பேருந்தில் கட்டணமில்லை உத்தரவு வெளியானதிலிருந்து சிற்றுந்துகள் முழுமைமாக நிறுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் பேருந்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் அவர்கள் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நகர்புற அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைக்க பொன்னமராவதிக்கு வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி, ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம் மணி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் ஆகியோர் மீண்டும் பேருந்து வசதி செய்து தரக்கோரி சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் பொன்னமராவதியிலிருந்து துவரங்குறிச்சிக்கு கண்டியாநத்தம் வழியாக மூன்று முறை வந்து செல்லும் வகையில் புறநகர் பேருந்து சென்று வர அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதனையடுத்து கண்டியாந்த்தம் கிராமத்திற்கு வருகை தந்த பேருந்தை பொதுமக்கள் வரவேற்றதோடு நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.மேலும் இப்பேருந்து இதற்கு முன்பு இவ்வழியே சென்றதும் சிற்றுந்தினால் இப்பேருந்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று வழித்தட எண் 9 ஆம் எண்‌ பேருந்து ஒருமுறை மட்டுமே வருகிறது என்றும் நண்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படுவதில்லை என்றும் இப்பேருந்து மீண்டும் இயக்கப்பட்டால் மகளிருக்கு உதவியாக இருக்கும் என்று கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் முன்னாள் துணை தலைவர் சேகர்,திமுக நிர்வாகிகள் ஆண்டியப்பன்,வார்டு உறுப்பினர் அழகப்பன் சரோஜா தேவி,வத்துமலைராசு, சந்திரன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடத்துனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *