ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, நீலகிரியில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறப்பதற்கு தடை

#Ramnathgovind | #Mrche

இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படைத்தளம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காலை 11.40 மணிக்கு ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ஊட்டி ஹெலிகாப்டர் தளத்தில் மதியம் 12.15 மணிக்கு வந்து இறங்குகிறார். பின்னர் சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். இனை தொடர்ந்து குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை கலந்துரையாடி பேசுகிறார். நாளை ராணுவ நிகழ்ச்சியை முடித்துவிட்டு 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். 6-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், ஊட்டி ராஜ்பவனுக்கு வருகிறார்.

இதனால் ஊட்டியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *