கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

 
#Krishnagiri Dam |#MrCHENEWS

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்து, தண்ணீரை திறந்து வைத்தார்.இதில் பர்கூர் மதியழகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கால்வாயில் பொங்கி வந்த தண்ணீரில் மலர் தூவப்பட்டது. இதன்மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, நாகோஜன அள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *