கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு – பரிசல் இயக்க தடை

#pavanisagar dam |  #MrCheNews

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அணை நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. இதனை அடுத்து தண்ணீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்தடைந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், அணையில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுக்கவும் தடை விதித்து உள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *