புதுக்கோட்டையில் உள்ள “புதுக்குளம்” சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா பகுதிகளில் ஒன்றான நமது புதுக்குளமானது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டதாகும்,

இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையின் ஆட்சியாளராக இருந்தபோது சேசையா சாஸ்திரி 1878 – 1886 திவானாகவும், 1886 – 1894 திவான் மற்றும் அரச பிரதிநிதியாகவும் பணியாற்றிய காலத்தில் புதுக்குளம் ஏரியை கட்டியெழுப்பி சிறப்பான மழைநீர் வடிகால் முறையில் புதுக்கோட்டையை சிறப்புறச் செய்தார், மேலும் புதுகை நிர்வாக கட்டிடங்கள் மற்றும் பல ஆலயங்கள் இவரது மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது,

நூற்றாண்டுகள் கடந்த, நன்னீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஏரி இன்று, கழிவுநீர் குளமாகிப்போனது,
15 வருடங்களுக்கு முன்பு புதுகை மக்களின் மாலை நேர பொழுது போக்கில் முதலிடத்திருந்தது புதுக்குளம்,

அன்றைய நாளில் காலை, மாலை நடை பயிற்சி, படகு சவாரி, விளையாட்டு பூங்கா,
இருபுறமும் மரங்கள் நிறைந்த நடைபாதை,
நிழற்குடைகள், இருக்கைகள் என பல்வேறு வசதிகள் இருந்தன ஆனால் இன்று பராமரிப்பற்று, பொலிவிழந்துள்ளது, குளத்தைசுற்றியுள்ள வெளி-வேலியில் குப்பைகளை கொட்டுதல், மாலை நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களால் கிழக்கு & தெற்கு கரைகளை பயன்படுத்த அச்சம் நிலவுகிறது…..

புதுகை சட்டமன்ற உறுப்பினர் திரு.வை.முத்துராஜா அவர்கள் சிறந்த சேவைகளை செய்துவரும் நேரத்தில்,
இதனையும் கருத்தில் கொண்டு
நமது புதுக்குளத்தை மறுசீரமைக்க நகராட்சிக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிட வேண்டுகிறோம்…..

  • நான்கு கரைகளிலும் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தி நிழற்சாலைகள் அமைத்தல்
  • கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி பாதுகாப்பை உறுதிபடுத்துதல்
  • புதுக்குளத்தின் வெளி-வேளியை சீர்படுத்தி கரையின் இறக்கம் முழுவதும் பூச்செடிகள் , பூங்காவாக மாற்றுதல்
  • நிழற்குடைகள் & இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி சீரமைத்தல்
  • இரவுகளில் அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகளை ஒளிரச்செய்தல்
  • மீண்டும் படகு சவாரி, நீரூற்றுகளை செயல்படுத்துதல்
  • குழந்தைகள் விளையாட்டு பூங்காவை நவீன தரத்தில் மேம்படுத்துதல்
  • வாகன நிறுத்த வசதி, குடிநீர் வசதி, சிற்றுண்டி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை நமது புதுக்குளத்தின் முக்கிய தேவைகளாகும்.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *