முதலமைச்சருக்கு நன்றி கூறும் விதமாக புதுக்கோட்டை தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றம்.

R. செல்வம் புதுக்கோட்டை தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.

புதுக்கோட்டை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் செல்வம். மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் ஜெயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், உள்ளிட்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து தீர்மானம்

ரேஷன் பொருட்களை தரமானதாக வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் சொந்தமாக கட்டிடங்கள் உருவாக்கி உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Pudukkottai Whatsup Group Link – https://chat.whatsapp.com/Fe8Xy7B6CjgKNzw5eztn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *