http://www.mrchenews.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-08-at-7.26.13-PM.jpeg

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாலையில் கிடந்த 18 ஆயிரம் மதிப்பிலான செல்போனை காவல்நிலையத்தில் கொடுத்து 4 ஆம் வகுப்பு மாணவன்

சாலையில் கிடந்த 18 அயிரம் மதிபிலான செல்போனை மீட்டு பொன்னமராவதி காவல்நிலையத்தில் ஒப்படைத்த என்மகன் இ.பிரகாஷ்ராஜ்.

பொன்னமராவதி,ஜூலை.8-

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகரில் சாலையில் கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் கொடுத்து பாராட்டு பெற்றார் 4 ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகர் சாலையில் ஜூலை 8 இரவு 8.30 மணி அளவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 ஆம் வகுப்பு மாணவன் இளையராஜாவின் மகன் பிரகாஷ்ராஜ் சாலையில் செல்போன் கிடப்பதை பார்த்துள்ளார். நூலிடையில் உயிரை பனையம் வைத்து எதிரே வந்த லாரியை வழிமறித்து செல்போன் உடையாத நிலையில் காப்பாற்றியுள்ளார். மேலும் சாலையில் கிடந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் தனபாலன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிறிய வயதில் நான்காம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்ராஜின் இந்த செயலை கண்டு வியந்த பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் உள்ளிட்ட சக காவலர்கள் சிறுவனை பாராட்டியுள்ளனர். மேலும் ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரான நெற்குப்பை அரசுப் பள்ளியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Pudukkottai Whatsup Group Link – https://chat.whatsapp.com/Fe8Xy7B6CjgKNzw5eztn6U

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *