பெட்ரோல், டீசல் விலை உயர்வால் டிராக்ட்டரை விட்டு பழங்கால முறையில் மீண்டும் ஏர்கலப்பை, மாட்டு வண்டியை பயன்படுத்தி விவசாயத்தில் இறங்கினர்.!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நெல்லையில் விவசாயிகள், மீண்டும் ஏர்கலப்பை, மாட்டு வண்டிகளை பயன்படுத்தி விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை தாண்டி விட்டது. இதேபோல் டீசல் விலையும் நூறு ரூபாயை நெருங்கி வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களில் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் விவசாயிகளும் டிராக்டர் மற்றும் விவசாய கருவிகளை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நெல்லை பகுதி விவசாயிகள் மீண்டும் ஏர்கலப்பை, மாட்டு வண்டிகளை பயன்படுத்தி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை சேந்திமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவர், விவசாய பணி முடிந்து ஏர்கலப்பை, மற்றும் உழவு கருவிகளை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *