தெலங்கானாவில்; டுரோன்களை மூலம் தடுப்பூசி வினியோகதிற்கு அனுமதி..!!

புதுடில்லி;

வெகு உயரத்தில் செல்லும் டுரோன்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை வினியோகிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள தெலுங்கானா அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தடுப்பூசிகளின் வினியோகத்துக்கு, பார்வையில் படக்கூடிய தொலைவிற்கு அப்பால் செல்லும் டுரோன்களைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தெலுங்கானா அரசுக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு வழங்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் டுரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு, ஆளில்லா விமானங்கள் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் செல்லும் (VLOS) டுரோன்களை பயன்படுத்தி, கொரோனா தடுப்பூசிகளை வினியோகிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள தெலங்கானா அரசுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

டுரோன் பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக, கண்ணுக்கு எட்டாத உயரத்தில் (BVLOS) செல்லும் டுரோன்களைப் பரிசோதிப்பதற்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம்.

இந்த விலக்கு, நிலையான செயல்பாட்டு விதிமுறை (எஸ்ஓபி) வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்போ அதுவரை செல்லுபடியாகும்.
இம்மாதத் தொடக்கத்தில், பார்வைக்கு எட்டாத உயரத்தில் செல்லும் டுரோன்களைப் பரிசோதனை செய்ய 20 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பரிசோதனைகள், டுரோன்கள் மூலமான டெலிவரி மற்றும் இதர முக்கியமான பயன்பாடுகளுக்கான ஒழுங்குமுறையை உருவாக்க உதவும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *