காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை – ரூ.5 கோடி ​ஒதுக்கீடு..!!

காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்க ரூ 5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை இந்த தொற்று ஏற்படுத்தி வருகிறது ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 188பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 3915 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24898 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 810 பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை மாநிலத்தில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முககவசம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் ppeகிட் என்றழைக்கப்படும் பாதுகாப்பு கவச உடைகளை கிருமிநாசினி முக கவசங்களை அரசே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இதற்கான ரூபாய் 5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *