பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய – சீமான்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதவியேற்பு விழாவில் பிரமுகர்கள் அனுமதிக்கப்படுள்ளனர்.

இதனிடையே முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் விழா சிறக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில், ” சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *