உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் – இன்று தேர்வான இந்திய அணி ..!!

லண்டனில் நடைபெறும் ஐசிசியின் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, இன்று அறிவிக்கப்படவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. இந்தப் போட்டியில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளன. இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதாத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்துள்ளது. ஜூன் 23-ந்தேதியை ரிசர்வ் டே-வாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 4 தொடக்க ஆட்டக்காரர்கள், 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 9 பந்துவீச்சாளர்கள், 3 விக்கெட் கீப்பர்களைக் கொண்ட அணியை தேர்வு செய்ய உள்ளதாக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு தெரிவித்துள்ளது.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews