வலிமைக்கே வலிமை சேர்க்க இந்தியாவுக்கு வருகின்றது 3 ரபேல் போர் விமானங்கள்..!!

இந்திய விமானப்படையில் அதனுடைய வலிமையை அதிகரிப்பதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா ஆடர் செய்திருந்தது. எனவே பிரான்ஸ் மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி ரபேல் போர் விமானங்களை அனுப்பி வைப்பதாக பிரான்ஸ் ஒப்புக்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி, புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் தற்போது 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன. உலகில் அதிகம் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் போர்விமானங்கள் ஆன ரஃபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டு தயாரிப்பில் மிகவும் சிறந்தது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சகட்டம்: நட்பை வெளிப்படுத்திய மற்றொரு நாடு! எனவே இத்தகைய வலிமை பொருந்திய ரஃபேல் விமானத்தைப் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்திருந்தது.

இதற்காக 36 விமானங்கள் ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு 2016 ம் ஆண்டு இந்திய மற்றும் பிரான்ஸ் ஒரு ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக ஒப்புக்கொண்டது. அதன்படி பிரான்ஸ் நாடு தங்கள் தயாரித்து வழங்கும் ரபேல் விமானங்களை படிப்படியாக இந்தியாவிற்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி முதல் விமானம் இந்தியாவில் இந்தியாவை வந்தடைந்தது. மேலும் அதன் தொடர்ச்சியாக இதுவரை 5 முறை விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்

. தடுப்பூசி போடும் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்! இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட மொத்த ரபேல் விமானங்களில் எண்ணிக்கை தற்போது 17 வரை இருந்துள்ளது. மேலும் 3 விமானங்களை பிரான்ஸ் நேற்று அனுப்பி அதன் வாயிலாக இந்திய விமானப்படையில் மொத்தமாக உள்ள ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு ஜாம் நகரை ரஃபேல் விமானங்களின் வந்தடைந்தன. வழியில் அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு நாட்டின் நடுவானில் பெட்ரோல் நிரப்பப்பட்டது. பின்னர் அவை ஜான் நகரை வந்தடைந்தன. அங்கிருந்து அம்பாலா படைப்பிரிவு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த விமானங்கள் அம்பாலா படை பிரிவிலும் மேற்குவங்க பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன.

மீதி உள்ள விமானங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. இந்தியப் படையில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டது இந்தியப் படையின் சத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *