அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வரும்; ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்காவில் தடுப்பூசி போட இலக்கு என தகவல்..!!

ஜூலை மாதத்திற்குள் 70 சதவீதம் அமெரிக்கர்களு​க்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக, அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ஜூலை 4 ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கர்களில் 70 சதவீதத்தினருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதையும், 16 கோடி அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு உதவி வருவதாக குறிப்பிட்ட ஜே பைடன். பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு தேவையான சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 

#MrChe மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *