தடுப்பூசி ஒரு தவணை போட்டால் போதும் உருமாறிய கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் – ஆய்வில் கண்டுபிடிப்பு ..!!

1221746173 skaman306/Getty Images


லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி, குயின் மேரி பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பார்ட்ஸ், ராயல் ப்ரீ ஆகிய ஆஸ்பத்திரிகளில் இங்கிலாந்து சுகாதார பணியாளர்களுக்கு ஒரு தவணை ‘பைசர்’ நிறுவன தடுப்பூசி செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஏற்கனவே அறிகுறி இல்லாத, லேசான கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த உருமாறிய கொரோனாக்களில் இருந்து போதிய பாதுகாப்பு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை கொரோனா வராதவர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி மட்டும் போட்டால், போதுமான தடுப்பாற்றல் கிடைக்கவில்லை என்றுதெரியவந்தது.அவர்கள்உருமாறியகொரோனாவால்பாதிக்கப்படுவதற்கான ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இந்த ஆய்வின் மூலம், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் ரோஸ்மேரி பாய்டன் தெரிவித்தார்.


இந்த ஆய்வுக்கு இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த உருமாறிய கொரோனாக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாக்களுக்கும் பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *