பிரிட்டன் அரசு அனுப்பி வைத்த கோவிட் நிவாரணப் பொருட்கள் 4வது தவணையாக டெல்லிக்கு வந்தது ..!

பிரிட்டன்;

பிரிட்டன் அரசு அனுப்பி வைத்த கோவிட் நிவாரண மருத்துவ உபகரணங்கள் நான்காவது தவணையாக டெல்லிக்கு நேற்று வந்து சேர்ந்தன 495 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 200 வெண்டிலேட்டர் போன்ற உயிர் காக்கும் மருத்துவ பொருட்கள் இதில் அடங்கும் பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் னுடன் நடத்திய காணொளி உரையாடலை எடுத்து இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.


கடந்த ஒரு வாரத்தில் 300 டன் எடை கொண்ட கோவிட் நிவாரண பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 25 விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளன இதில் 5500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் 3 ஆயிரத்து 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரெம்டிசிவர் ஊசிகளும் உள்ளதாக டெல்லி விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இந்த மருத்துவ உதவிகள் மாநில அரசுகளுக்கு பிரித்து அளிக்கப்படுகின்றன.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *