மேலும் தமிழகம் வருகிறது 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!!

சென்னை: மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் தடுப்பூசி போடமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 60 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தது.


இந்நிலையில், இன்று (மே 4) காலை ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தது. விமானம் மூலம் தமிழகம் வந்த தடுப்பூசிகள், கண்டெய்னர் வாகனம் மூலம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிற்பகலில் மும்பையில் இருந்து விமானம் மூலம் மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தது.

#MrChe மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *