குஜராத் மருத்துவமனை தீ விபத்து: 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!!

குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் அதிகாலை 1 மணிக்கு வெல்பேர் ஹாஸ்பிட்டலில் திடீரென தீ பிடித்துக்கொண்டது. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து மீட்பு பணியிலும் தீயை அணைப்பதிலும் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் தீ முற்றிலும் அனைக்கபட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 நோயாளிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் உறங்கிய நிலையிலேயே தீயில் கருகி பரிதாபகரமாக உயிரிழந்தனர் .

மேலும் மீட்கப்பட்டவர்களில் சிலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் கொரோனா நோயாளிகள் ஆவர்.

மருத்துவமனை படுக்கையில் நோயாளிகள் தீயில் கருகி அப்படியே இறந்து கிடந்தது அனைவரது நெஞ்சையும் பரிதவிப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. 4 மாடிகள் கொண்ட இம்மருத்துவமனையில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு போதிய அளவு படுக்கைகள், ஆக்ஸிஜன் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மற்றொருபுறம் கொரோனா
நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் அடிக்கடி தீவிபத்துக்களும் நடந்து வருவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *