திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்…!!

வெற்றித் திரைப்படங்களாக அயன், மாற்றான், கவண் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்ததால் திரையுலகமே சோகத்தில் உள்ள நிலையில் மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *