அடேங்கப்பா …! ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசிக்காக 1.33 கோடி பேர் முன்பதிவு..!!

டெல்லி: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் நாளில் 1.33 கோடி பேர் இதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா 2-வது அலை பரவலைத் தொடர்ந்து ஜனவரி 16-ந் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முதியவர்கள் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டனர். தற்போது கொரோனா பரவல் மிக உச்சமாக இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான http://www.cowin.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த முன்பதிவு நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1.33 கோடி பேர், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் இணையதளமும் ஆரோக்ய சேது, உமாங் செயலிகளும் முடங்கிப் போயின. பின்னர் நிலைமை சரி செய்யப்பட்டது.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Linkhttps://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *