ரூ.1 கோடி மதிப்பிலான கரோனா தடுப்பூசி பராமரிக்கும் உபகரணங்களை ; ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் தமிழக அரசுக்கு வழங்கியது..!!

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் கரோனா தடுப்பூசியை பராமரிக்க ரூ.1 கோடி மதிப்பிலானஉபகரணங்கள் சுகாதாரத் துறைசெயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டன.

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல தேவையான பராமரிப்பு உபகரணங்களை தமிழக அரசுக்குவழங்கும் நிகழ்ச்சி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. மெட்ராஸ் ரோட்டரி கிளப் தலைவர் கபில் சித்தலே ரூ.1 கோடி மதிப்பிலான தடுப்பூசிகளை கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடைய 4 வாகனங்கள், தடுப்பூசியை வைப்பதற்கு 40 ஐஸ்-லைண்ட் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 1,000 தடுப்பூசி கேரியர்களை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர்நாராயணபாபு, ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநராக தேர்வாகியுள்ள ஏ.எஸ்.வெங்கடேஷ், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இயக்குநர் (சிறப்பு திட்டம்) எஸ்.பாலகிருஷ்ணன், தலைவர் கவுதமதாஸ், இணைத் தலைவர் ஏ.எம்.விஸ்வநாதன், செயலாளர் பி.பி.பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் பல்வேறு தடுப்பூசி திட்டங்களில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இதுபோன்று தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் அரசுடன் இணைந்து செயல்படவேண்டும். கரோனாவை எதிர்கொள்ள 2 வழிகள் மட்டுமே நம்மிடம்உள்ளன. ஒன்று சமுதாய தடுப்பூசியான முகக்கவசம். மற்றொன்று தடுப்பூசி. அனைத்து கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தமிழகத்தில் சிலரிடம் அச்சம் உள்ளது. இதற்கு தேவையில்லாத வதந்திகள்தான் முக்கிய காரணம்.

தடுப்பூசிகளை மாநில அரசேகொள்முதல் செய்வது குறித்து மத்திய அரசு இன்னும் தெளிவாக சொல்லவில்லை. தடுப்பூசி பற்றாக்குறை இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். தடுப்பூசியை வீணாக்கக் கூடாது என அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *