ஜாம்ப்பா எதிர்பார்த்தது போல் தற்போது பிரெட் லீயும் ரூ.41 லட்சம் பெறுமான உதவியை இந்தியாவுக்காகப் புரிந்துள்ளார்..!!

ஐபிஎல் 2021-லிருந்து பாதியிலேயே விலகி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா, இந்த முறை வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் யுஏஇ.யில் ஏற்பட்ட நம்பிக்கை இந்த முறை ஏற்படவில்லை என்றும் அதனால் பாதியில் விலகினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிட்னி மார்னிங் ஹெரால்டு ஊடகத்துக்கு ஆடம் ஜாம்ப்பா கூறும்போது யுஏஇ-யில் நடந்த போது பாதுகாப்பு வளையமான பயோ பபுள் பாதுகாப்பாக இருந்தது என்றும் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது அதனால் விலகியாதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் இப்போதெல்லாம் பயோபபுள் எனும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கப் பழகிக் கொண்டு விட்டோம், ஆனால் இப்போது இந்தியாவில் மிகவும் பலவீனமாக உள்ளது, பாதுகாப்புப் போதவில்லை. இங்கு சுகாதாரம் பற்றி எப்பவுமே எச்சரிக்கப்பட்டுள்ளோம். இதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை இருப்பதால் நான் விலகினேன், இந்த முறை மிகவும் பலவீனமான பாதுகாப்பு வளையமாக உள்ளது.

துபாயில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். இந்த முறையும் அங்கேயே நடத்துவதைத்தான் நான் பர்சனலாக உணர்கிறேன், ஆனால் நிறைய அரசியல் நடந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

ஆனால் இந்தியாவில்தான் உலகக்கோப்பை டி20 நடைபெறுகிறது, அதற்கு இன்னும் 6 மாதகாலம் இருப்பினும் பாதுகாப்பு கேள்வி இருக்கவே செய்கிறது. ஆனால் 6மாதம் என்பது தொலைவில் உள்ளது.

நிச்சயமாக இந்தியாவில் கோவிட் 19 சூழ்நிலை மிக மோசமாக உள்ளது. பயிற்சி உள்ளிட்டவையில் ஆடினேன். ஆனால் அணியில் ஆடவில்லை. பயிற்சிக்குப் போனேன் ஆனால் எனக்கு ஆடுவதற்கான உத்வேகமே வரவில்லை.

அதாவது பயோபபுள் உள்ளுக்குள்ளேயே இருப்பது பெரும் அயர்ச்சி. வீட்டுக்கு சென்றால் போதும் என்ற எண்ணமே இருந்தது. விமானச்சேவை உள்ளது என்றவுடன் வீட்டுக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணமே இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட தருணத்தில் கிரிக்கெட் ஒரு பெரிய ரிலீஃப் என்று பலரும் கருத்துக் கூறுகின்றனர். ஆனால் இது அவரவர் சொந்தக் கருத்துதான். குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது கிரிக்கெட் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

நிச்சயம் பாதியிலேயே தொடரிலிருந்து விலகுவது பண வரவை தியாகம் செய்வதுதான். ஆனால் மன ஆரோக்கியத்துக்கே முன்னுரிமை.

பாட் கமின்ஸின் உதவி உண்மையில் பெருந்தன்மையான செயல். இனி இதுபோன்ற உதவிகள் அதிகம் வரும். இந்திய மக்களின் கடினங்களை நினைத்துப் பார்க்கிறேன். சூழ்நிலை மோசமாக உள்ளது, இது கிரிக்கெட்டை விடவும் பெரியது முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன்” இவ்வாறு கூறினார் ஆடம் ஜாம்ப்பா.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *