இந்திய விமானங்களுக்கு 25 வெளிநாடுகள் தடை!!

புதுடெல்லி:

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள 3வது வகை கொரோனா வைரஸ் காரணமாகவே, 2வது அலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளால், தங்கள் நாட்டுக்குள் இந்த கொரோனா நுழைந்து விடக்கூடாது என வெளிநாடுகள் பீதி அடைந்துள்ளன.

இதனால், இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதை தடுப்பதற்காக, இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே, மாலத்தீவு, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, ஈரான், தாய்லாந்து, வங்கதேசம், குவைத், இந்தோனேஷியா, பிரிட்டன், ஓமன், ஹாங்காங், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய், பாகிஸ்தான் உட்பட 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன. பல அண்டை நாடுகள் இந்தியா உடனான எல்லையை மூடி விட்டன.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *