கொரோனா சான்றிதழில் ‘கியூ.ஆர்.கோடு’ இல்லை; வெளிநாடு செல்வோர் திண்டாட்டம்..!!

திண்டுக்கல்:

‘அரசு வழங்கும் கொரோனா சான்றிதழில் ‘கியூ.ஆர்.கோடு’ இல்லாததால் வெளிநாடு செல்லும் விமானங்களில் அனுமதிப்பதில்லை’ என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுதும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கொரானா சான்றிதழை ஸ்கேன் செய்து பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் வழங்கும் கொரோனா சான்றிதழில் ‘கியூ.ஆர்.கோடு’ இடம் பெறுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவமனையில் ‘கியூ.ஆர்.கோடு’ உடன் சான்றிதழ் வழங்குகின்றனர். ‘கியூ.ஆர்.கோடு’ இல்லாத சான்றிதழுடன் வந்தால் பயணிகளை விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.

நடவடிக்கை தேவை;

திண்டுக்கல்லை சேர்ந்த பிரசாந்த் கூறியது: கடந்த ஏப்.23 ம் தேதி மதுரையில் இருந்து துபாய் செல்ல இருந்தேன். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு ‘நெகட்டிவ்’ சான்றிதழுடன் விமான நிலையம் சென்றேன். அங்கு சான்றிதழில் ‘கியூ.ஆர்.கோடு’ இல்லை எனக் கூறி விமான ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்தனர். ஆர்.டி.பி.சி.ஆர்., சான்றிதழ் வைத்திருந்தும் அனுமதிக்கவில்லை. டிக்கெட் கட்டணமும் திரும்ப கிடைப்பதில்லை. ‘கியூ.ஆர்.கோடு’ இடம் பெறும் சான்றிதழுக்காக ரூ.3500 கொடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தேன். அரசு வழங்கும் சான்றிதழிலும் ‘கியூ.ஆர்.கோடு’ இடம் பெற சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *