# 200 அந்நிய நாட்டு செலவாணியான #பணம் #நாணயங்களை ஆர்வத்துடன் சேகரித்து வைத்துள்ளார்; இராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர்..!!

ராமநாதபுரம்;

ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது அல் சுவைத் என்ற மாணவர் 200 நாடுகளின் பணம், நாணயங்களை சேகரித்துள்ளார்.

மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுபுஹான் மீரான். வாகன ஓட்டுநர். இவரது மகன் முகம்மது அல் சுவைத் ராஜா (14), 9-ம் வகுப்பு மாணவர். இவர் 10 வயது முதல் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் செய்தி களைப் பார்த்து நாணயச் சேகரிப் பில் ஈடுபட்டார்.P

அதையடுத்து வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் உறவினர் கள், இணையதளம் மூலம் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள், நாணயங்களைச் சேகரித்து வருகிறார். தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் 1,100 கரன்சிகள், சுமார் 500 நாணயங்களை சேகரித்துள்ளார். சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு. இங்கு 2 சதவீதத்துக்கும் குறை வான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள்.

மாணவர் முகம்மது அல் சுவைத்

ஆனாலும், இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளில் விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள அரிதான நோட்டும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கு கட லோரப் பகுதியில் உள்ள தீவான மொரிஷீயஸில் 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த நோட்டுகளும், ஜிம்பாப்வே நாட்டின் 100 ட்ரில்லியன் டாலர் நோட்டு, சிங்கப்பூரின் பிளாஸ்டிக் நோட்டுகளும் இவரது சேகரிப்பில் உள்ளன.

இது குறித்து மாணவர் முகம்மது அல் சுவைத் கூறும்போது, நான் சேகரித்து வைத்துள்ள பல்வேறு நாடுகளின் நாணயங்கள், நோட்டுகளை எங்கள் பள்ளியில் கண் காட்சியாக வைக்க விரும்புகிறேன் என்றார்.

#MrChe #மிஸ்டர்சே

ராமநாதபுரம் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/CPy5j2EdWqq3xn3kbK4IE0

Facebook Link – https://www.facebook.com/groups/RamanathapuramNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *