ஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு!!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களது பயிற்சி உள்ளிட்ட செலவுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி அளித்து வருகிறது.

கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த திட்டத்தில் இடம் பிடித்து இருந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா காயம் காரணமாக அதில் இருந்து விலகினார். இந்த நிலையில் 34 வயதான சானியா மிர்சா மீண்டும் ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ள வீராங்கனைகளுக்கான சிறப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. குழந்தை பெற்றுக்கொண்டதால் சானியா மிர்சா 2 ஆண்டுக்கு மேலாக விளையாடாவிட்டாலும், டென்னிஸ் சங்கத்தின் சிறப்பு திட்டத்தின் கீழ் அவரது தரவரிசை பாதுகாக்கப்பட்டதால் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *