சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 88 ரூபாய் உயர்வு!!

சென்னை,

ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து ரூ.4,345-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கத்தால், பாதுகாப்பான முதலீடுகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். இதன் காரணமாக தங்கத்தில் அதிக மூதலீடுகள் செய்யப்பட்டதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. 

தொழில்துறை தேக்கத்தால் பொருளாதார பாதிப்பு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இதற்கிடையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது


இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயர்ந்து ரூ.4,345-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

#MrChe #மிஸ்டர்சே

சென்னை மாநகர ,செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/Cnqnevuvy1T5UqV7JLoKhg

Facebook Link – https://www.facebook.com/groups/ChennaiCityNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *