திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி; 2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு !!

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

துரைமுருகனுக்கு கொரோனா:


துரைமுருகனுக்கு கொரோனா இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த நிலையிலும் துரைமுருகனுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் கொரோனா நோய் தொற்று வராது என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. ஒருவேளை நோய் தொற்று ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு சிறிய அளவுக்கு இருக்கும் என்று சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது.

இரு டோஸ்:

85 வயதானவர் துரை முருகன் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் . மொத்தம் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்த நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொரோனா சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் தனிமை:

துரைமுருகன் சோதனை செய்ததில் துரைமுருகனுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் அற்ற வகையில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்படுவதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். துரைமுருகனுடன் பழகியவர்கள் அனைவரும் தங்களுக்கு பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களை இப்போதே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

#MrChe #மிஸ்டர்சே

சென்னை மாநகர ,செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/Cnqnevuvy1T5UqV7JLoKhg

Facebook Link – https://www.facebook.com/groups/ChennaiCityNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *