காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு தயார் நிலையில் வாகனங்கள்!!


காஞ்சிபுரம் :


தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம், தேர்தல் துணை பொருட்கள் உள்ளிட்டவைகள் அந்தந்த தேர்தல் இருப்பு மையங்களில் இருந்து காலை முதல் அனுப்பப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபேற போலீசார் ரோந்து காவல் வாகனம் மூலம் தொகுதி முழுவதும் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 தொகுதிகளில் இவர்கள் பயணம் செய்ய 100-க்கும் மேற்பட்ட வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கத்தில் நிறுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

#MrChe #மிஸ்டர்சே

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link –https://chat.whatsapp.com/I8eLeoGiNPt4hXokna9k69

Facebook link – https://www.facebook.com/groups/KanchipuramDistrictNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *