தீவட்டிப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் சிக்கினர் !!

சேலம்:

ஓமலூ,


ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சி சரக்கபிள்ளையூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினருக்கு புகார் சென்றது. இதையடுத்து பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 30), கார்த்திக் (40) ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் இருவரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 170 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரவீன், கார்த்திக் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *