மயிலாடுதுரை மாவட்டம் திருக்கடையூரில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இளநீர் விற்பனை அமோகம் !!


மயிலாடுதுரை ,

திருக்கடையூர்:

திருக்கடையூரில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

வெயிலின் தாக்கம்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

இந்தநிலையில் கோடை காலம் என்பதால் திருக்கடையூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

இளநீர் விற்பனை அமோகம்:

அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இளநீர், சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை விரும்பி வாங்கி சாப்பிட்டு தாகத்தை தணித்து கொள்கின்றனர். இதனால் திருக்கடையூர் பகுதியில் வியாபாரிகள் விற்பனைக்காக இளநீரை கொண்டு வந்து குவித்துள்ளனர். திருக்கடையூர் சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல மடவிளாகம், தெற்கு வீதி, கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விற்பனை அமோகமாக நடந்தது. திருக்கடையூர் பகுதியில் இளநீர் கடைகளில் தான் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

*மயிலாடுதுரை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள *

Whatsapp Link – https://chat.whatsapp.com/HxdF86EEjRM9Rk5o6tvU2B

Facebook Link – https://www.facebook.com/groups/MayiladuthuraiNews/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *