ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், “ஓட்டுக்கு யாரும் பணம் வாங்கக் கூடாது என்று தீர்மானம்” !!


ராமநாதபுரம் ,

கமுதி,

கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்த இக்கிராமத்தில் கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய இந்த கிராம மக்கள் கூட்டம் நடத்தினர். கிராமத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். இதில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு யாரும் பணம் வாங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

#MrChe #மிஸ்டர்சே

ராமநாதபுரம் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/CPy5j2EdWqq3xn3kbK4IE0

Facebook Link – https://www.facebook.com/groups/RamanathapuramNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *